செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (16:03 IST)

உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற திட்டம்? அதிரடி காட்டும் அமெரிக்கா!

உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை ஏற்றுமதி செய்து வந்தன. இதற்கான தயாரிப்பு வரியை அமெரிக்கா உயர்த்தியது. 
 
ஆனால், அமெரிக்கா இறக்குமதி செய்யும் அதே அளவுக்கு பிற நாடுகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க வேண்டும் என சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட நாடுகள் வர்த்தகப்போரில் ஈடுபட்டுள்ளனர். 
 
சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறினார். 
 
தற்போது, உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்துவதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. 
 
ஆனால், அமெரிக்காவை வர்த்தக அமைப்பு ஒழுங்காக நடத்தவில்லை எனில் சூழ்நிலையை பொருத்து எங்கள் முடிவு மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.