ரஷ்யா மீது பொருளாதார தடை: டிரம்ப்!
ரஷ்யா மீது விரைவில் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் குறிப்பிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பொருளாதார தடை விதிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் என்னவுள்ளது என தெரியவில்லை.
இது குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது, அமெரிக்காவில் இயங்கும் முக்கிய ஊடகங்கள் ரஷ்யாவுக்கு எதிரான எனது நடவடிக்களை கவனிக்க தவறிவிட்டன. ஆனால் என்னைவிட ரஷ்யாவுடன் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது.
நாம் விரைவில் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்க இருக்கிறோம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 2016 ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய 6.5 லட்சம் இ-மெயில்கள் இணையத்தில் வெளியாகின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் செயல்பட்டதாகவும் இது டிரம்புக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.