வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (13:48 IST)

சிரியா மீதான தாக்குதல் தொடரும் - டிரம்ப்

சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

 
சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.  
 
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலை துவங்கினர். சிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதலில் எங்களுக்கு சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டன என்றும், எங்கள் ராணுவ மையங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று சிரியா தெரிவித்துள்ளது.
 
ரசாயன தாக்குதலை அழிக்கும் வரை சிரியா மீதான தாக்குதல் நீடிக்கும். சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும். இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்று டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார்.