ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:53 IST)

72 வயது மூதாட்டியை காதலித்து கரம்பிடித்த இளைஞர்!

அமெரிக்காவில் கணவரை பிரிந்து வாழும் 72 வயது மதிக்கதக்க மூதாட்டியை, 19 வயது இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் வசித்து வருபவர் அல்மேடா, 72 வயதாகும் அவருக்கும் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு  பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.
 
இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடுவு செய்தனர். இதற்கு இருவரின் வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
 
திருமணமான மூதாட்டி அல்மேடாவுக்கு தற்போது 6 பேரன் மற்றும் பேத்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.