செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (11:02 IST)

வேலையாட்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து; 20 பேர் பலி

தாய்லாந்தில் வேலையாட்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டு 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தனியார் கம்பெனி பேருந்து ஒன்று 50 தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாய், பேருந்தின் மையப்பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் பயத்தில் அலறினர். தொழிலாளர்கள் பலர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். மீதமுள்ளவர்கள் தப்பிக்க முயற்சித்த போது, பேருந்தில் தீ மளமளவென்று பற்றி எறிந்தது.
இதனையடுத்து விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதிலும் இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.