1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (13:34 IST)

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 13 பேர் பலி

வியாட்நாமில் உள்ள ஹோசிமின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 
 
ஹோசிமின் பகுதியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஆறு வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது, இதில் மொத்தம் 22 மாடிகள் உள்ளன. இன்று அதிகாலை இந்த குடியிருப்பில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் கொழுந்துவிட்டு ஏரிந்த தீ மிக வேகமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதானல், அந்த குடியிருப்பு வாசிகள் வேகமாக படியின் மீது ஏறி மேல்மாடிக்கு சென்றனர்.
 
தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தினால் மொத்தம் 13-பேர் உயிரிழந்ததாகவும், பலரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
 
மேலும், வியாட்நாமில் 2016-ம் ஆண்டு மதுமான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு அங்கு ஏற்படும் மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும் என கூறப்படுகிறது.