1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (15:25 IST)

சிறைச்சாலையில் தீ விபத்து- 68 பேர் பலி

வெனிசுலா நாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கலவரத்தினால் ஏற்பட்ட தீ விபத்தால் 68 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
இன்று அதிகாலை வெனிசுலா நாட்டில் உள்ள வாலன்சியா சிறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சிறையில் கைதிகள் அதிகளவில் உள்ளனர். நேற்று சிறை கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது இதனால் சிறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறைக்கு தீ வைத்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
 
ஆனால், தீ வேகமாக சிறைக்குள் பரவியதால் அனைத்து கைதிகளும் சிறையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கைதிகளின் உறவினர்கள் சிறையின் முன் போராட்டம் நடத்தினர். அதனால் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி களைத்தனர். 
 
இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக சிறை அதிகாரி வில்லியம் சாப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தீ விபத்தில் 68 பேர் பலியாகியுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரனை நடத்த கூழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.