வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (17:37 IST)

லூனாவுக்கு ஒரே பிரசவத்தில் 20 குட்டிகள்... வைரல் தகவல்

அமெரிக்காவில் உள்ள கலப்பின லாப்ரடார் என்ற நாய் ஒன்று, ஒரே பிரசவத்தில் 20 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சலையில் லூனா என்ற கலப்பின லாப்ரடார் நாய் சுற்றித்திரிந்தது. அப்போது இதனைப் பார்த்த டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள காப்பகம் ஒன்று மீட்டு  அதனை வளர்த்து வந்தது.
 
இந்நிலையில் லூனா கர்ப்பமடைந்தது.  நல ஆர்வலர்கள் சிசிசேரியர் செய்தனர். அந்த பிரசவத்தில் லூனாவுக்கு ஒரே பிரசவத்தில் 20 குட்டிகள் பிறந்தன.அவற்றில் 2 குட்டிகள் பிறந்த சில நொடிகளிலேயே உயிரிழந்தன.
 
இதற்கு முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு, இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த நாய் ஒன்று, ஒரே பிரசவத்தில் 24 குட்டிகளை ஈன்றது கின்னஸ் சாதானையாக பதிவுசெய்யப்பட்டது.