1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 மே 2025 (15:24 IST)

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள், பாகிஸ்தான் கொடி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்துள்ளன.
 
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இது மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைக் கண்டித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்  இந்த நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டின் உணர்வுகளை மதித்து, இத்தகைய பொருட்கள் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: "தேசிய சட்டங்களை மீறும் வகையில், சில பொருட்களை விற்பனை செய்வது ஏற்க முடியாதது. இ-வணிக நிறுவனங்கள் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்," என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கை, இணையவழி விற்பனையிலும் ஒழுங்குமுறை மற்றும் தேசிய சிந்தனையை முக்கியமாக கருத வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
 
Edited by Mahendran