1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

அரிசி மாவு வடகம் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1கப்
தண்ணீர் - 4 கப்
பச்சை மிளகாய் விழுது - காரத்திற்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:
 
வாணலியில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில், மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதற்கு தண்ணீர் அளவு தேவையில்லை.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கரைத்த மாவை, கொதிக்கும் நீரில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் கிளறியதும், அடுப்பை முழு சூட்டில் வைக்கவும்.
 
மாவு வெந்து வரும் பொழுது, குமிழ்கள் தோன்றி தெறிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வெந்த மாவு சற்றே நிறம் மாறும்.அப்பொழுது, கையை தண்ணீரில் நனைத்து, மேலாக தொட்டு பார்க்கவும். விரலில் ஒட்டாமல் இருந்தால், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். 
 
சூடு ஆறிய பின், சுத்தமான வெள்ளை துணியில், சிறு துண்டுகளாக வைத்து, ஆற விடவும். வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். சுவையான அரிசி மாவு  வடகம் தயார்.