வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தூதுவளை ரசம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
தூதுவளை இலைகள் - 1 கப்
வரமிளகாய் - 1
சின்ன வெங்காயம்- 6
தக்காளி - 1
பூண்டு - 6 பல்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
ரசப் பொடி - 1 ஸ்பூன்
புளி - எலுமிச்சை பழ அளவு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். புளியைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் கரைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய்யை ஊற்றி தூதுவளை, பூண்டு ,வெங்காயம் ,வரமிளகாய் ,மிளகு , சீரகம் மற்றும் தக்காளி ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 
பிறகு கடாயில் எண்ணெய் விட்டுத் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இவை வதங்கிய பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.  அனைத்தும் நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் ரசப் பொடி சேர்க்கவும்.

பிறகு புளி தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவையான  உப்பைக் கலந்து கொள்ளவும். நுரை கூடியவுடன் ரசத்தை நிறுத்தவும். தற்போது சுவையான தூதுவளை ரசம் தயார்.