செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த வெஜிடபிள் ஓட்ஸ் அடை செய்ய !!

தேவையான பொருள்கள்:
 
துருவிய கேரட்  -  அரை கப்
 கோஸ்  -  அரை கப்
சோம்பு  -  1 டீஸ்பூன்
ஓட்ஸ்  -  1 கப்
பச்சை மிளகாய்  -  2
உப்பு,  எண்ணெய்  -  தேவையான அளவு

செய்முறை:
 
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்தபின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
 
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து  கொள்ளவும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
 
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும். சுவை மிகுந்த வெஜிடபிள் ஓட்ஸ் அடை தயார்.