ஆரோக்கியம் தரும் கம்பு ஊத்தப்பம் செய்ய !!
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், சிவப்பு மற்றும் பச்சை நிற குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கம்பு மாவுடன் நீர் கலந்து, தோசை மாவு பக்குவத்தில் நன்றாக கலந்து கொள்ளவும். ருசிக்கு தகுந்த உப்பு சேர்க்கவும்.
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சிறிதளவு உப்புடன் கலந்து வைக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிய பின், கம்பு மாவு கலவையை தடித்த தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
தோசை மீது தாராளமாக வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடை மிளகாய் கலவையை தூவி வேகவைக்கவும். ஒரு பக்கம் வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும். சூப்பரான கம்பு ஊத்தப்பம் தயார்.