1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:49 IST)

விதியை மீறிய ரைசா ; முட்டையை தூக்கி சென்ற மர்ம நபர் - பிக்பாஸ் வீட்டில் களோபரம்

ரைசாவின் நடவடிக்கையால் பிக்பாஸ் வழங்கிய முட்டைகளை அந்த வீட்டில் இருப்பவர்கள் பறி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது என்பது முக்கிய விதிமுறை. ஆனால், ரைசா தொடந்து பகலில் தூங்கிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் பிக்பாஸிடம் சண்டையும் போட்டார். 
 
இந்நிலையில், பிக்பாஸுடன் மோதும் ரைசா என்ற தலைப்பில் ஒரு புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பகலில் தூங்கும் ரைசாவை பிக்பாஸ் அழைத்து பேச, அப்படி ஒரு விதிமுறை இல்லை.. எனக்கு கூறவில்லை என சண்டை போடுகிறார் ரைசா. இதைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் முட்டைகளை முகமுடி அணிந்த மர்ம நபர் உள்ளே புகுந்து எடுத்து சென்று விடுகிறார். அதை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
 
விதிமுறைகள் மீறப்படுவதாக சென்ற வாரம்தான் கமல்ஹாசன் கோபப்பட்டார். இந்நிலையில், ரைசா மீண்டும் அதே தவறை செய்துள்ளார். இப்படி தொடர்ந்து பிக்பாஸிடம் ரைசா மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் அவர் விரைவில் வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது.