திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (18:09 IST)

ஹரீஸ் உன்னை லவ் பண்றான் - ரைசாவிடம் கோத்து விடும் காஜல்

பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள நடிகை காஜல் அங்கிருக்கும் ஒவ்வொருவரிடம் வெற்றி பெறுவதற்கான ஐடியாக்களை கொடுத்து வருகிறார்.


 

 
ஏற்கனவே, ஹரீஸிடம் ‘நீ ஓவியாவை சப்போர்ட் செய்து அனைவரிடமும் பேசு. அவளுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு உன்னை பிடித்துவிடும். மக்களோடு பயணித்தால் மட்டுமே உன்னால் வெற்றியடைய முடியும்’ என ஐடியா கொடுத்தார்.
 
மேலும், ரைசாவிடம் சென்று ‘ஹரீஸுக்கு உன் மேல் காதல் இருக்கிறது என நினைக்கிறேன். ஓவியா, ஆரவ் போல் ஏன் நீங்கள் இருவரும் காதலிக்க கூடாது. அப்படி செய்தால் கொஞ்ச நாள் எங்களுக்கு நல்லா பொழுது போகும்’ என கொளித்திப் போட்டார்.
 
ஆனால், அதெல்லாம் வேண்டாம் என ரைசா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.