செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (17:04 IST)

வாயை விட்டு மாட்டிக்கொண்ட காயத்ரி - வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரியை டிவிட்டரில் சில கருத்துகளை தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.


 

 
பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை கோபத்தில் தவறான வார்த்தைகளை பேசுவது மற்றும் ஒருவருக்கு எதிராக குரூப் உருவாக்குவது, புரணி பேசுவது என காயத்ரியின் நடவடிக்கைகள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும், 50 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த காயத்ரி, சென்ற வாரம் வெளியேறினார்.  
 
வெளியே வந்து பின்பே அங்கிருந்த பார்வையாளர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு அவரை துளைத்தெடுத்தனர். சில பெண்கள் அவருக்கு அறிவுரையும் வழங்கினர்.
 
இந்நிலையில், மீண்டும் டிவிட்டர் பக்கம் வந்துள்ள காயத்ரி வீட்டிற்கு வந்துவிட்டேன், மிகவும் மகிழ்ச்சி” என டிவிட்டும், “ நான் ஒரு ஒன் மேன் ஆர்மி” எனவும் டிவிட் செய்துள்ளார்.
 
அவ்வளவுதான்.. ஏற்கனவே அவரின் மேல் கோபமாக இருக்கும் நெட்டிசன்கள் அவரை ஏகத்துக்கும் வறுத்து எடுத்துவிட்டனர்.
 
வெளிய வந்தா எல்லாரையும் செஞ்சிருவேனு சொன்னீங்களே.. செஞ்சிடிங்களா கால்சியம் மேடம்?
 
நீங்க எப்போ women ல இருந்து man எ மாறினீங்க? bb போயிட்டு வந்ததுல எல்லாமே மறந்து போச்சா?
 
ஒரு பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கியதற்கு நன்றி. நீங்களாம் அரசியலுக்கு வரணும்
 
பாவம் சீர் க்கு ஜாதிக்கு லாம் அர்த்தம் தெரியாது கணேஷ் சொன்ன மாதிரி குழந்தை... 
 
ஏன ஏகத்துக்கும் டிவிட் போட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.