1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:52 IST)

பிக்பாஸ் வீட்டில் இரவில் நடத்தப்பட்ட டாஸ்க்; சுஜா வருணிக்கு உதவிய சிநேகன்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று முன் தினம் பிக்பாஸிடம் தன் வாழ்க்கை குறித்து பேசினார். பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்டில் இருப்பதாகவும், அதனை நீக்க சுஜாவருணியிடம் ஒரு டாஸ்கை கொடுத்தார் பிக்பாஸ்.

 
அதில் டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் இரவு விளக்குகள் அனைத்தவுடன் தொடங்கும் என்றும், விடிய விடிய நடக்கும் இந்த  டாஸ்கில் வீட்டிலிருக்கும் யாரையாவது ஒருத்தரை சுஜா தனக்கு துணையாக தேர்ந்தெடுக்கலாம் கூறினார். அதன்படி சுஜா  சினேகனை பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கில் தனக்கு துணையாக தேர்ந்து எடுத்தார்.
 
டாஸ்க்கின்படி சுஜா வருணி, சினேகன் ஆகியோர் இரவு முழுவதும் ஒருவர் பந்தை போட மற்றொருவர் புடிக்க வேண்டும். இவ்வாறு பந்தை மாறி மாறி எரிந்துகொண்டிருக்கவேண்டும். அப்படி செய்தால் சுஜா எலிமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படுவார். இப்படி ஒரு டாஸ்க் கொடுத்ததால் பிக்பாஸ் வீட்டிலுள்ள கணேஷ் மற்றும் ஆரவ் இரவு நேரத்தில் டாஸ்க்  செய்பவர்களுக்கு உதவியாக இருந்தனர். இதனால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பில் இருந்தனர்.