1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:05 IST)

ட்வீட் போட்ட காயத்ரிக்கு பதிலடி கொடுத்த ஓவியா ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் ஓட்டுகளை வைத்து வெளியெற்றப்பட்டார் காயத்ரி. இந்நிலையில் வெளியே வந்த காயத்ரி ரகுராம் தற்போது வீட்டில் இருக்கிறார். அப்போது ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து ஒரு ட்விட் போட்டார். அதனை ரசிகர்கள் திட்டி பதில் ட்வீட் போட்டதனால், அந்த ட்வீட்டை காயத்ரி நீக்கி விட்டார்.

 
இந்நிலையில் மீண்டும் தனது வீட்டில் நாயுடன் இருக்கும் போட்டோவை போட்டு ஐயம் பேக் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா மீண்டும் வரவேண்டும் என்று ஓவியா கமிங் சூன் என்று  கோலம் போட்டிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காயத்ரி, ஓவியாவை போல இருக்க ஆசைப்பட்டு சுஜா வருணி  அவருடைய ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார் என்று ட்வீட் செய்துள்ளார்.


 
 
இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கழுவி ஊத்தி வருகின்றனர். இதனை எல்லாம் நீங்கள் சொல்ல கூடாது கால்சியம் மேடம் என்று கூறியுள்ளனர். இதனால் எதை போட்டாலும் திட்டுகிறார்களே என்று செய்வதறியாமல் உள்ளார் காயத்ரி.