வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:23 IST)

மகரம் - மாசி மாத பலன்கள்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரக நிலை: ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு -  அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
பகைகளை தவிடுபொடியாக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால்  பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.
 
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை  வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி  இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு  பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.
 
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல  நேரலாம்.
 
மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
 
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள்  உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த  சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில்  நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
 
திருவோணம்:
 
இந்த மாதம் புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் -உறவினர்களை  அனுசரித்துச்செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.
 
அவிட்டம் 1,2 பாதம்
 
இந்த மாதம் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு  மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
 
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி13, 14; மார்ச் 13, 14
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 20, 21.