முதலாளியை காப்பாற்ற போராடும் நாய்! மிரட்டலான "வாட்ச்மேன்" ட்ரைலர் !

புதன், 20 மார்ச் 2019 (19:30 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் பட ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

 
தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜி.வி பிரகாஷ்,  இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல ஆரம்பத்தையும் அமோக வரவேற்பையும் பெற்று தந்தது.
 
அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ்  விஜய் இயக்கத்தில் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படதில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து  சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
சமீபத்தில் நரேந்திர மோடியை கலாய்க்கும் விதத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
வித்தியாசமான முறையில்  நாய் ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது . அந்த நாய் தனது முதலாளியை காப்பாற்ற போராடுவதை போல் அமைந்துள்ள இந்த ட்ரைலருக்கும்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

நள்ளிரவில் ரவுன்ட்ஸ் போகும் டிஎஸ்பி.. கதறும் சமூக விரோதிகள்.. இப்பதான் பொதுமக்கள் நிம்மதி.. இதுதாண்டா ஆட்சி..!

சூர்யாவின் கருப்பு இன்று ரிலீஸ் இல்லையா? அனைத்து காட்சிகளும் ரத்து? நாளையாவது ரிலீஸ் ஆகுமா?

25 லட்சம் தறோம்!. பண்ணை வீட்டுக்கு வான்னு கூப்பிடுறாங்க!.. நடிகை பகீர் புகார்!..

Karuppu: கருப்பு சிறப்பு காட்சி ரத்து!.. சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!...

AA23 படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடி அவரா?!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லோகேஷ் கனகராஜ்..

அடுத்த கட்டுரையில்
Show comments