வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (09:15 IST)

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் ஜிவி பிரகாஷின் 2 படங்கள்

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவருடைய படங்கள் சூப்பர்ஹிட் ஆகாவிட்டாலும் போட்ட முதலீடுக்கு நஷ்டமில்லாமல் சுமாரான லாபத்தை தருவதால் இவருக்கு படங்கள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அவை '100% காதல்', 'வாட்ச்மேன்' மற்றும் 'குப்பத்து ராஜா' ஆகிய மூன்று திரைப்படங்கள் ஆகும்
 
இந்த நிலையில் 'குப்பத்து ராஜா' திரைப்படத்தின் டிரைலர் வரும் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தை வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்தடுத்த வாரங்களில் ஜிவி பிரகாஷின் இரண்டு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது
 
 ஜிவி பிரகாஷ், சக்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.