தனுஷின் ’’கர்ணன்’’ பட ரீமேக்கில் நடிக்கவுள்ள இளம் நடிகர்

Sinoj| Last Modified வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:44 IST)
 

சமீபத்தில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் கர்ணன்.

இப்படத்தை எஸ்.தாணு தயாரித்திருந்தார். தனுஷ் நடித்த படங்களில் இப்படத்திற்கு அதிக ஓபனிங்கிடைத்ததாகவு, இது அவரது கேரியரில் அதிக வசூல் குவித்த படம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க பிர்பல அடிகர் பெல்லம்கொண்டா சாய் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் பெல்லம்கொண்டா சாய் சாய்ஸ்ரீனிவாஸ்.  இவருக்கு கர்ணன் படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்ட அனைத்தும் பிடித்ததாகத் தெரிகிறது.

எனவே இப்படத்தில் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும் கர்ணன் படம் வரும் மே 9 ஆம் தேதி அமேசான்பிரைமில் ரிலீசாகவுள்ளது.  இதில் மேலும் படிக்கவும் :