செல்வராகவனிடம் அதைக் கேட்ட தாணு… அப்படியே ஷாக் ஆகிட்டாராம்!

Last Modified புதன், 28 ஏப்ரல் 2021 (18:27 IST)

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் நடிக்க உள்ள நானே வருவேன் திரைப்பட பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்
உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

ஆனால் அதன் பின்னர் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறதாம் அந்த படப் பணிகள். இந்நிலையில் செல்வராகவனின் சமீபத்தைய தோல்விகளால் தாணு படத்தின் முழு பவுண்டட் ஸ்கிரிப்ட்டையும் செல்வராகவனிடம் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். செல்வராகவன் வழக்கமாக தயாரிப்பாளர்களிடம் அதுபோல எல்லாம் ஸ்கிரிப்ட் கொடுக்கும் ஆள் இல்லை என்பதால் அவரும் ஜெர்க் ஆகியுள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :