கமல், தனுஷ் பட வில்லன் நடிகரின் நடிப்பை புகழ்ந்த இயக்குநர் !

cheran
Sinoj| Last Modified வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:07 IST)

கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சேரன். இவர் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். பின்னர், பொற்காலம், ஆட்டோகிராஃப், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய
'பிக் பாஸ் சீசன் - 3'
நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தி ஒரு பதிவிட்டுள்ளார்.அதில், ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு.. எவ்வளவு பேருக்கு நடுவில் ஒரு நடிகன் தன் உணர்ச்சிகளை முகத்தில் எந்த பதட்டமுமின்றி காட்டவேண்டும்.. இங்கே டேனியல்பாலாஜி.. நான் ரசிக்கும் வளரும் கலைஞன்.. கூடவே நமோநாராயணன்..
@NandaPeriyasamy

@srivaarifilm


@balabharani


@Gautham_Karthik எனப் பதிவிட்டுள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் தம்பியான டேனியல் பாலாஜி , பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு வில்லாகவும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக இரண்டு வில்லன்களில் ஒருவராக நடித்திருந்ததார்.இதில் மேலும் படிக்கவும் :