வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (18:56 IST)

தனுஷின் ஜகமே தந்திரம்’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த உறுதி செய்யப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வராததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது
 
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் வேறு வழியின்றி ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.