புனேவில் நயன்தாரா ,யோகி பாபு - ஷாருக்கான் படத்தின் செம அப்டேட்!
ஜவான் என பெயரிடப்பட்டுள்ள ஷாருக்கானின் புதிய திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள நயன்தாரா நேற்று புனே கிளம்பிய ஏர்போட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்த படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதையடுத்து யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கிறாராம். இதற்காக யோகி பாபுவும் புனே கிளம்பி செல்வதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.