1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (10:10 IST)

ரெண்டு நாள்தான் நடிச்சேன்… பிரச்சனைக்கு பதிலளித்த யோகி பாபு!

நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதையடுத்து இப்போது வீரப்பன் கஜானா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார். அந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

ஆனால் இந்த தலைப்பு தங்கள் குடும்பத்தினரின் மனதை பாதிக்கிறது என வீரப்பனின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்க இப்போது பெயரை மாற்ற ஆலோசித்து வருகின்றனர். இது சம்மந்தமாக யோகி தரப்பு ‘இரண்டு நாட்கள் மட்டுமே நட்பின் அடிப்படையில் அந்த படத்தில் நடித்து கொடுத்ததாகவும், ஆனால் தான் முழுநீள கதாநாயகனாக நடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.