ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:07 IST)

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் இளம் நடிகர்… அதுவும் நயன்தாரா படத்தில்!

நடிகர் ஸ்ரீ படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற தரமான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. ஆனால் அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வில்லை. அதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லையா அல்லது அவரின் அலட்சியமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நயன்தாரா நடிப்பில் யுவ்ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.