1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:55 IST)

அவ்வை ஷண்முகி ஆகும் யோகி பாபு!

நடிகர் யோகி பாபு லதா என்ற இயக்குனர் இயக்கும் படத்தில் முழுவதுமாக லேடி கெட்டப்பில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்வராகவனின் உதவியாளர்களான மித்ரன் ஆர் ஜவஹர் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் இயக்குனராக உருவாகி படங்களை இயக்கியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக வேறு யாரும் அந்த பட்டறையில் இருந்து வேறு எந்த இயக்குனரும் வரவில்லை. அந்த குறையை போக்குவதற்காக இப்போது லதா என்ற இயக்குனர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படம் முழுவதும் யோகி பாபு பெண் வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கான தனது அடையாளமான தோற்றத்தை மாற்ற முடிவு செய்துள்ளாராம்.