விஜயகாந்தை சுசீந்திரன் சந்தித்தது ஏன்?
இயக்குநர் சுசீந்திரன், விஜயகாந்தை சந்தித்ததற்கான விடை கிடைத்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ நிறைய தியேட்டர்களில் ரிலீஸாவதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்துள்ளார் சுசீந்திரன். காரணம், இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அதனால், விஜயகாந்திடம் வாழ்த்து பெறச் சென்றாராம் சுசீந்திரன். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சமூக விஷயங்களை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறாராம்.