கூட்டணியே வேண்டாம் ; உங்களுக்கு பெரிய கும்பிடு : விஜயகாந்த் அலறல்


Murugan| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (12:22 IST)
இனிமேல் கூட்டணி வைக்கப்போவதில்லை, தனியாகத்தான் தேர்தலில் போட்டியிடுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

 
தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்ட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை அவர் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
தமிழக பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அதன்பின் வருகிற உள்ளாட்சி தேர்தலில், மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 
 
அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “உங்களுக்கு பெரிய கும்பிடு. இனிமேல் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட மாட்டேன். தனியாகத்தான் தேர்தலை சந்திப்பேன்” என பதிலளித்தார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து தேர்தலை சந்தித்து, தேமுதிக படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :