தேமுதிக பொதுக்குழு தீர்மானங்கள்: விஜயகாந்துக்கு புதிய பதவி

Abimukatheesh| Last Updated: சனி, 30 செப்டம்பர் 2017 (15:35 IST)
காரைக்குடியில் இன்று நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேமுதிவில் பொதுச் செயலாளர் பதவி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவின் கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் உள்ளது. தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக இருந்த சுதீஷ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி கட்சி பிரேமலதாவின் முழுகட்டுப்பாட்டின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேமலதாவுக்கு எந்த வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :