வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (14:46 IST)

'மெர்சல்' பிரச்சனையில் விஷால் மெளனம் காப்பது ஏன்?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு பாஜக கொடுத்து வரும் கண்டனத்திற்கும் எதிர்ப்பிற்கும் கோலிவுட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல் முதல் ஆர்ஜே பாலாஜி வரை அனைத்து நடிகர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில் விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் யாரும் இந்த பிரச்சனையில் இதுவரை தலையிடவில்லை



 
 
மெர்சல் பிரச்சனையில் நடிகர் சங்கம் மெளனமாக இருப்பதற்கு உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நடிகர் சங்கம் பொதுக்கூட்டம் உள்பட எந்த ஒரு கூட்டத்திற்கு அஜித்தும் சரி, விஜய்யும் சரி கலந்து கொள்வதில்லை. எனவே இருவர் மீதும் கடும் ஆத்திரத்தில் இருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும் 'மெர்சல் குழுவினர் நடிகர் சங்கத்திடம் நேரடியாக வந்து ஆதரவு கேட்டால் கண்டிப்பாக குரல் கொடுப்போம் என்று ஒருசில நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.