1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (13:23 IST)

அட்ரா சக்கை...மெர்சல் படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 
அதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள்” என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.