திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (13:22 IST)

ரூ.1 லட்சம் மட்டும் சம்பளம் வாங்க தயாரா? விஜய்க்கு மருத்துவ சங்கம் கேள்வி

இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசன பிரச்சனைகளுக்கே பதில் சொல்ல முடியாமல் மெளனம் காத்து வரும் படக்குழுவினர் தற்போது டாக்டர்கள் சங்கத்தின் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.



 
 
'மெர்சல்' படத்தில் மருத்துவம் என்பது வியாபரம் இல்லை சேவை என்ற வசனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவிசங்கர், 'நடிகர் விஜய் ரூ.1 லட்சம் மட்டும் சம்பளமாக வாங்கிக்கொண்டு சினிமாவில் நடித்தால் நாங்களும் ரூ.5க்கு மருத்துவம் பார்க்க தயார் என்று கூறியுள்ளார்.
 
ரூ.200 டிக்கெட்டை ரூ.2000க்கு விற்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய், ரூ.5க்கு மருத்துவம் என்பது குறித்து பேசுவற்கு உரிமை இல்லை என்று மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேலும் டாக்டர்கள் யாரும் 'மெர்சல்' படத்தை பார்க்க வேண்டாம் என்றும், மெர்சல் படத்தின் ஆன்லைன் பைரசிக்கு முழு ஆதரவு கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.