தல, தளபதி படங்களில் நயன்தாரா கமிட் ஆனது ஏன்?

Last Updated: புதன், 28 நவம்பர் 2018 (18:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன் தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்ற முடிவில் இருந்தார். அதேபோல், அறம், டோரா, இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹிரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடித்தார். 
 
தற்போது நயன்தாரா ஏற்கனவே அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து வருவதுடன் தற்போது விஜய்யின் 63 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பெரிய ஹிரோக்களுடன் நடித்தால் ஹீரோயின்களுக்கு பெரிதாக வேலை இருக்காது என தெரிந்தும் ஏன் தல, தளபதி படங்கலில் கமிட் ஆனார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இதற்கு சில விடைகளும் கிடைத்துள்ளது. அதாவது, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி போன்ற இளம் நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதால் தங்களுக்கு ஹீரோக்கள் மத்தியில் மார்க்கெட் சரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் வரும் வாய்ப்பை நழுவவிடாமல் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :