ஜெர்மனியில் ஹெலிகாப்டர் நிறுவனத்தினருடன் அஜித் ஆலோசனை

VM| Last Modified புதன், 28 நவம்பர் 2018 (11:51 IST)
ஜெர்மனி சென்றுள்ள நடிகர் அஜித், தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டத்துக்காக
 
 அங்குள்ள ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ட்ரோன் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்தது. 
 
 தக்‌ஷா குழுவின் அடுத்த திட்டம் தொடர்பாக நடிகர் அஜித் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு வாரியோ  ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


இதில் மேலும் படிக்கவும் :