1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (18:06 IST)

இன்று முதல் தொடங்கியது தளபதி 63: ரசிகர்கள் உற்சாகம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தளபதி 63' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் வெளியிட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் செட் அமைக்கும் பணி தொடங்கியது. இதனையடுத்து சென்னையில் இதற்கான பூஜை இன்று நடந்தது இந்த பூஜையில் இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய பூஜைக்கு பின்னர் செட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த படத்திற்காக இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான அதே நேரத்தில் பிரமாண்டமான செட்கள் அமைக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர். இன்று முதல் அதிகாரபூர்வமாக 'தளபதி 63' படத்தின் பணிகள் தொடங்கியதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், டி.முத்துராஜ் கலை இயக்கத்தில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படம் 2019 தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது