செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (13:38 IST)

ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை செய்த அஜித் ! - வைரல் புகைப்படம்

தக்க்ஷா குழுவின் அடுத்த திட்டத்திற்காக நடிகர் அஜித் ஜெர்மனி சென்று ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஆலோசனை செய்து வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் பல சாதனைகளை புரிந்து வரும் தக்‌ஷா குழு அனைவரிடமும் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்த பின்னர், தன் குடும்பத்துடன் ஒரு வாரம் செலவிட்ட அஜித் பின்னர், வெளிநாடு சென்றதாக தகவல்கள் வெளியானது.
 
அதனைத்தொடர்ந்து, அஜித் ஜெர்மனி சென்றிருக்கிறார் எனவும் அங்கு ட்ரோன் தொழில்நுட்பங்களை கற்கிறார் எனவும் செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆளில்லா விமானமான ட்ரோன் குட்டி விமானத்தை இயக்குவதற்கு மற்றும் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை ஜெர்மனியில் கற்று வருகிறார் அஜித். சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அஜித்தின் புகைப்படங்கள் பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

https://twitter.com/ThalaAjith_FC/status/1067628053684117504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1067628053684117504&ref_url=http%3A%2F%2Fwww.ns7.tv%2Fta%2Fd944c2