ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:29 IST)

'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது? புதிய தகவல்

தளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச் மாதம் இணைகிறார். 
மகளிர் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சில சண்டை காட்சிகள் அண்மையில் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது.
 
இந்நிலையில் அட்லி  இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரபுதேவா இயக்கிய வில்லு படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்து நயன்தாரா நடிக்கிறார். நயன்தாரா தளபதி 63 படக்குழுவினருடன் வரும் மார்ச் மாதம் இணைகிறார். அதன்பின் நயன்தாரா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
 
இப்படத்தில் யோகிபாபு, கதிர், டேனியல் பாலாஜி, மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.