வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உணவில் சுண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தும்....!

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. சுண்டைக்காயில் இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராக்கூடியது.
காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணிக்களை அதிகரிப்பதுடன் காயங்களையும்,  புண்களையும் ஆற வைக்கும்.
 
தையமின், ரொபோஃளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்கக்கூடியது.
 
நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவும்.
 
சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
 
பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக  சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.
 
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
 
உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய்  சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.
 
வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
 
பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படுமென்பது பெண்களுக்கு நல்லது.
 
சுண்டைக்காயைக் காயவைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.