புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:16 IST)

தேர்தல் அறிக்கை – மக்களிடமே கருத்து கேட்ட ஸ்டாலின் !

திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இருக்கா வேண்டுமென விரும்புகீறிர்களோ அந்தக் கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள் என திமுக கேட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தனது கூட்டணியை உறுதி செய்துள்ள திமுக காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு விவரங்களையும் அறிவித்துள்ளது. மேலும் மற்றக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக வின் தேர்தல் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு விரைவில் வெளியாகும் என நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதையடுத்து இன்று தனது டிவிட்டர் தளத்தில் தேர்தல் அறிக்கை குறித்த ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் மக்களிடம் ‘ நீங்கள் திமுக வின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கோரிக்கைகளை கேட்க  ஆவலாக உள்ளோம். அனைவரும் இணைந்து நமது மாநிலத்திற்கு சிறந்த சேவையாற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.