என்னது மீண்டும் சுசி லீக்ஸா? - அதிர்ச்சியில் திரை பிரபலங்கள்
திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.
இது குறித்து சுஜித்ராவின் கணவர் கார்த்திக் கூறுகையில், சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவின் கணவர் கார்த்திக் போலீசில் புகார் செய்ததோடு, நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்தார். பின்னர் ஒருவழியாக சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் திரை உலகினர் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்பிட்டு நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின. அதில் ‘கபாலி’ படத்தில் ரஜினி பேசும் ‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு’ என்ற ‘பஞ்ச்’ வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, ‘எந்த நடிகையின் வீடியோ வேண்டும்’ என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகர் - நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளதாகவும், இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.