சென்னை போன்ற நகரங்களில் ஒரு நாள் முழுவதும் பயணிக்கும் ரூ.50 டிக்கெட் விலையை அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசின் பேருந்து கட்டணம் நேற்று இரவு திடீரென உயர்த்தப்பட்டது. மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை ரூ.17-ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து...