1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (12:49 IST)

படத்த எடுக்க சொன்னா சீரியல எடுத்து வச்சிருக்கீங்க...

அஜித் படம் என்றாலே மாஸ் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அதுவும் ஒரு வருடம் கழித்து பொங்கல் ஸ்பெஷ்லாக அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்தார்கள். 
 
விஸ்வாசம் படம் மாஸ் படம் மட்டுமின்றி ஃபேமிலி படம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டதால் படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. சொன்னதைபோல் செண்டிமெண்டில் உருக வைத்துள்ளது படம். 
 
இது போல படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் அஜித் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தாலும் ஆங்காங்கே நெகடிவ் கருத்துகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் டிவிட்டரில் வெளியான ஒரு பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. 
அந்த பதிவில், விஸ்வாசம் படம் 90களில் வந்திருந்தால் 50 நாட்கள் ஓடி இருக்கும். 2019-க்கு இது ஒரு தொலைக்காட்சி சீரியலை போல மொக்கையாக உள்ளது. அஜித்தின் சண்டை காட்சிகளுக்கு வேணுமானால் அவரது ரசிகர்கள் சந்தோஷப்படலாம். ஆனால் முழு படமாக பார்த்தால் மொக்கை என விமர்சித்துள்ளனர். 
 
இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 6 நாட்கள் விடுமுறை வேறு வரும் நிலையில், படம் எப்படியும் நல்ல கலெக்‌ஷன் பார்க்கும் என தெரிகிறது.