கத்திகுத்தை அடுத்து கட் அவுட் பிரச்சனை: ஆபத்தான நிலையில் அஜித் ரசிகர்கள்?

ajith
Last Updated: வியாழன், 10 ஜனவரி 2019 (11:57 IST)
திருக்கோவிலூரில் விஸ்வாசம் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்த போது, கட் அவுட் சரிந்து, பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர்.

வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கு கத்திகுத்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் திருக்கோவிலூரில், அஜித் ரசிகர்கள் சிலர் விஸ்வாசம் பட கட் அவுட்டிற்கு மேல் ஏறி மாலை அணிவித்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அந்த கட் அவுட், பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. கட் - அவுட்டில் இருந்து விழுந்த பலர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :