விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகன்

Last Updated: வியாழன், 10 ஜனவரி 2019 (12:49 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகி விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நேற்றிரவில் இருந்த விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆன திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து தெறிக்கவிட்டனர்.

இந்த நிலையில் காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூர் என்ற பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் நேற்று நள்ளிரவில் விசுவாசம் படம் பார்க்க தனது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் படம் பார்க்க தந்தை பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தூங்கி கொண்டிருந்த தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். நெருப்பின் சூடு தாங்காமல் அலறிய பாண்டியனை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அஜித் படத்தை பார்க்க பணம் தராததால் தந்தையையே எரித்து கொலை செய்ய முயன்ற அந்த இளைஞரின் பெயரும் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :