'விஸ்வாசம்' வெளியான தியேட்டரில் கத்திக்குத்து: இருவர் படுகாயம்

Last Updated: வியாழன், 10 ஜனவரி 2019 (12:49 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று அதிகாலை விஸ்வாசம் படத்தை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கத்திக்குத்து நடக்கும் அளவுக்கு முற்றியது


இந்த கத்திக்குத்தால் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தால் படம் தொடங்குவதில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :