கலவர பூமியான பிக்பாஸ் வீடு.. எல்லார் மேலயும் எகிறும் விக்ரமன்! – பிக்பாஸ் ப்ரோமோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜி.பி.முத்து, விக்ரமன், ஏடிகே, அசல் கோளாறு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ள இந்த கேம் ஷோ இரண்டு வாரத்திலேயே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.
தற்போது தனலெட்சுமியை அசல் ஒருமையில் பேசியதாக இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் அஸீம் புகுந்து சமாதானப்படுத்தி தனலெட்சுமியை வெளியே அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் விக்ரமன் அதுகுறித்து கேட்க வந்தார்.
இதனால் அஸீம் – விக்ரம் இடையே வாக்குவாதம் எழுந்தது. அதை சமாதானம் செய்ய ஜி.பி.முத்து முயல, ஜி.பி.முத்துவிடமும் விக்ரமன் கோவமாகவே பேசினார். தொடர்ந்து விக்ரமனை அங்கிருந்து அழைத்து செல்ல ஏடிகே முயல, அவரிடமும் விக்ரமன் எரிந்து விழ கடுப்பான ஏடிகே திரும்ப பேச என பிக்பாஸ் வீடே கலவரபூமியாக காட்சியளிக்கிறது ப்ரோமோவில்..
அஸீம், விக்ரமன் இருவருமே எலிமினேசன் பட்டியலில் உள்ள நிலையில் இந்த சண்டையால் யார் பக்கம் நியாயம்? யாருக்கு ஓட்டு போடலாம் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
Edited By: Prasanth.K