வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (15:22 IST)

“அவர் அப்படியேதான் இருக்கார்…” விஜய்யை சந்தித்த நடிகர் ட்வீட்!

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்தித்த நடிகர் மனோபாலா அவருடன் எடுத்துக் கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த படத்தின் பாடல் ஒன்றை படமாக்கும் காட்சி இணையத்தில் லீக் ஆகி மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா “விஜய்யை வாரிசு செட்டில் சந்தித்தேன். அவர் இப்போதும் அதே மாதிரிதான் இருக்கிறார்.  நடனம் ஆடும் என்னா எனர்ஜி. 15 நிமிட பேச்சு எனக்கும் உற்சாகத்தையும் எனர்ஜியைட்யும் கொடுத்தது” எனக் கூறியுள்ளார்.